search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகரில் அகில இந்திய வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்த படம்.
    X
    விருதுநகரில் அகில இந்திய வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தபோது எடுத்த படம்.

    நீதிமன்றங்களை திறக்கக்கோரி வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

    தமிழகத்தில் அனைத்து நீதிமன்றங்களையும் திறக்கக்கோரி வக்கீல்கள் சாத்தூர், விருதுநகரில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    சாத்தூர்:

    தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், அரசு பல்வேறு விதமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 7 மாதங்களுக்கு மேலாக நீதிமன்றங்கள் அனைத்தும் மூடப்பட்டு வழக்குகள் முழுவதும் காணொலி காட்சி வழியாக நடைபெற்று வருகின்றன.

    இதனால் வக்கீல்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. புதிய வக்கீல்கள் மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலையில் உள்ளதால், அனைத்து வக்கீல்களின் நலனை பாதுகாக்க நீதிமன்றத்தில் உரிய மருத்துவ பாதுகாப்போடு வக்கீல்களை உள்ளே அனுமதித்து நீதிமன்ற பணிகள் நடைபெற நடவடிக்கை எடுக்க கோரியும், அனைத்து வக்கீல்களுக்கும் வட்டியில்லாத கடனாக மத்திய, மாநில அரசு ரூ.3 லட்சம் வழங்க வேண்டும்.

    மேலும் குற்றவியல் சட்ட திருத்த நிபுணர் குழுவை வாபஸ் வாங்க கோரியும், சாத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவுவாயில் முன்பு அகில இந்திய வக்கீல் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட தலைவர் விஸ்வநாத் தலைமையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதேபோல் விருதுநகரிலும் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
    Next Story
    ×