search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் 54 ஆயிரம் பேர் - மாவட்ட வாரியாக விவரம்

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 54 ஆயிரத்து 184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று 5 ஆயிரத்து 175 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 73 ஆயிரத்து 460 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

    வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 54 ஆயிரத்து 184 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

    குறிப்பாக சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. ஆனால் திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர் போன்ற தென்மாவட்டங்களில் வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.   

    மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 31 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 14 ஆயிரத்து 815 ஆக அதிகரித்துள்ளது.

    ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 112 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 461 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

    அரியலூர் - 220
    செங்கல்பட்டு - 2,683
    சென்னை - 11,811
    கோவை - 1,571
    கடலூர் - 1,802
    தர்மபுரி - 87
    திண்டுக்கல் - 540
    ஈரோடு - 209
    கள்ளக்குறிச்சி - 915
    காஞ்சிபுரம் - 2,846
    கன்னியாகுமரி - 1,955
    கரூர் - 304
    கிருஷ்ணகிரி - 449 
    மதுரை - 2,107
    நாகை - 431
    நாமக்கல் - 368
    நீலகிரி - 164
    பெரம்பலூர் - 170
    புதுக்கோட்டை - 812
    ராமநாதபுரம் - 424
    ராணிப்பேட்டை - 1,677
    சேலம் - 1,166
    சிவகங்கை - 511
    தென்காசி - 866
    தஞ்சாவூர் - 812
    தேனி - 2,668
    திருப்பத்தூர் - 459
    திருவள்ளூர் - 3,548
    திருவண்ணாமலை - 2,148
    திருவாரூர் - 287
    தூத்துக்குடி - 1,840
    திருநெல்வேலி - 2,136
    திருப்பூர் - 332
    திருச்சி - 1,423
    வேலூர் - 1,311
    விழுப்புரம் - 820
    விருதுநகர் - 1,993
    விமானநிலைய கண்காணிப்பு 
    வெளிநாடு - 153
    உள்நாடு - 164
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 2

    மொத்தம் - 54,184
    Next Story
    ×