search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐஸ்கட்டி மீது அமர்ந்து யோகாசனம் செய்த லிர்த்திகாஸ்ரீ
    X
    ஐஸ்கட்டி மீது அமர்ந்து யோகாசனம் செய்த லிர்த்திகாஸ்ரீ

    கொரோனா பரவல்- ஐஸ்கட்டி மீது யோகாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சிறுமி

    கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கு ஐஸ்கட்டி மீது அமர்ந்து யோகாசனம் செய்து லிர்த்திகாஸ்ரீ என்ற சிறுமி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
    திருவண்ணாமலை:

    கொரோனா பரவலை தடுக்க அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யோகாசனம் செய்வதால் மூச்சு விடுவது இயல்பாக நடப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தி கூடி உடல் ஆரோக்கியமாக இருக்கும் என சுகாதார வல்லுனர்கள் தெரிவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்பை தடுப்பதற்கு யோகாசனம் செய்வது குறித்து மக்களை ஊக்குவிக்கும் வகையில் திருவண்ணாமலையில் 4½ வயதுடைய லிர்த்திகாஸ்ரீ என்ற சிறுமி ஐஸ் கட்டி மீது அமர்ந்து யோகாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சிறுமி லிர்த்திகாஸ்ரீ யு.கே.ஜி. படித்து வருகிறாள்.

    இவர் நேற்று திருவண்ணாமலை மின் நகரில் உள்ள ஸ்ரீ பகவான் யோகா பயிற்சி நிலையத்தில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த 4 ஐஸ் கட்டிகள் மீது 10 நிமிடங்கள் அமர்ந்து சமகோணாசனம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், சாதனை முயற்சியிலும் ஈடுபட்டார். மேலும் இது இந்தியன் புக்ஆப் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காகவும் பதிவு செய்து அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்று பயிற்சியாளர்கள் தெரிவித்தனர். ஐஸ் கட்டி மீது அமர்ந்து யோகாசனம் செய்த சிறுமி கடந்த ஒரு வருடமாக பயிற்சி பெற்று வருவதாகவும், தினமும் காலை ஒரு மணிநேரம் யோகா பயிற்சியில் ஈடுபவதாகவும் சிறுமியின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
    Next Story
    ×