search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அய்யனார் அணைக்கட்டு பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற காட்சி.
    X
    அய்யனார் அணைக்கட்டு பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற காட்சி.

    அய்யனார் அணைக்கட்டு பணிகள் முடிக்கப்படுமா?- விவசாயிகள் எதிர்பார்ப்பு

    ஆச்சாம்பட்டி அய்யனார் அணைக்கட்டு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
    திருக்காட்டுப்பள்ளி:

    தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியத்தின் தெற்குப் பகுதி எல்லையாக ஆச்சாம்பட்டி உள்ளது. இந்த கிராமத்தில் 500 ஏக்கர் பரப்பில் மழைத் தண்ணீரை தேக்கி வைக்கும் மிகப்பெரிய அய்யனார் அணைக்கட்டு உள்ளது. இந்த அணைக்கட்டில் தண்ணீர் வெளியேற 7 இரும்பு ஷட்டர்கள் கொண்ட மதகு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை பெய்தால் தஞ்சை மாவட்டம் புங்கனூர் கிராமம் வெள்ளத்தால் பாதிக்கும் என்பது பழைய கருத்து. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் பெய்யும் மழைநீர் முழுமையும் ஆச்சாம்பட்டியில் உள்ள அய்யனார் ஏரிக்கு வந்து சேரும். இந்த ஏரி மற்றும் அணைக்கட்டு இருக்கும் ஆச்சாம்பட்டி கிராமத்தில் ஏரியின் தெற்குபகுதியில் மட்டும் கரை உள்ளது. மற்ற 3 பகுதிகளும் இயற்கையாகவே மேடாக உள்ளது. அய்யனார் அணைக்கட்டை சீரமைத்து கரைகளை உயர்த்தி தண்ணீரை அதிகம் சேமிக்கும் வகையில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு ரூ.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அணைக்கட்டின் கரைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

    உயர்த்தப்பட்டுள்ள கரைகளில் மழை பெய்தால் அரிப்பு ஏற்படாமல் தடுக்க கான்கிரீட் பிளாக் அல்லது சாய்தள அமைப்பு பணிகள் செய்ய வேண்டும். அணையிலிருந்து தண்ணீர் வெளியேறும் பகுதியில் கரைகளை பலப்படுத்தும் பணிகள் செய்யப்பட்டுள்ளன. மதகில் மேல் பகுதியில் உள்ள கட்டிடங்கள் மற்றும் இரும்பு ஷட்டர்கள் அகற்றப்பட்டு புதிதாக அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. பருவமழை தொடங்கி அணைக்கட்டில் தண்ணீர் தேங்கினால் அதன் மூலம் ஆச்சாம்பட்டி, கூனம்பட்டி, செங்கிப்பட்டி, உள்ளிட்ட கிராமங்கள் ஒரு போக நெல் சாகுபடி செய்ய இயலும். இந்தநிலையில் அணைக்கட்டில் மதகு பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை விரைந்து முடித்து பருவமழை பெய்து வரும் நீரை அணைக்கட்டில் சேமிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Next Story
    ×