search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானிலை ஆய்வு மையம்
    X
    வானிலை ஆய்வு மையம்

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

    கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    சென்னை:

    வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

    தென்மேற்கு பருவக்காற்றால் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூரில் மழை பெய்யலாம்.

    தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    பலத்த காற்று வீசும் என்பதால் 4 நாட்களுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    அதிகபட்சமாக நீலகிரி தோவாலாவில் 15 செ.மீ., அவலாஞ்சியில் 10 செ.மீ., கூடலூரில் 9 செ.மீ., பந்தலூரில் 8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×