search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐகோர்ட் மதுரை கிளை
    X
    ஐகோர்ட் மதுரை கிளை

    தென்காசி விவசாயி அணைக்கரை முத்து உடலில் 4 இடங்களில் காயம்- நீதிபதி

    தென்காசி மாவட்டம் வாகை குளத்தில் வனத்துறையினர் தாக்கி விவசாயி உயிரிழந்ததாக எழுந்த புகாரில் அவரது உடலில் 4 இடங்களில் காயங்கள் உள்ளன என நீதிபதி தெரிவித்துள்ளார்.
    மதுரை:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஆழ்வார்குறிச்சி வாகைகுளத்தை சேர்ந்தவர் அணைக்கரை முத்து (வயது 72), விவசாயி. இவர் தனது வீட்டு அருகே வயலில் மின்வேலி அமைத்தது தொடர்பாக கடையம் வனத்துறையினர் அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

    இதற்கிடையே, அணைகரை முத்துவின் உடல் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால், வனத்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் விவசாயி உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட கோரி அவரது மனைவி தொடர்ந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையில் நீதித்துறை நடுவர் அறிக்கையின்படி உடலில் 18 இடங்களில் காயங்கள் இருந்ததாக மனுதாரர் தரப்பு வாதம் முன் வைக்கப்பட்டது.  பிரேத பரிசோதனை அறிக்கையின்படி அணைக்கரை முத்து உடலில் 4 இடங்களில் காயங்கள் உள்ளன என்று வழக்கு விசாரணையின்போது உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Next Story
    ×