search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    53 ஆயிரத்தை கடந்தது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை - மாவட்ட வாரியாக விவரம்

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவியவர்களில் 53 ஆயிரத்து 703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 6 ஆயிரத்து 986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 723 ஆக அதிகரித்துள்ளது. இதில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளடக்கம் ஆகும்.

    வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 53 ஆயிரத்து 703 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றும் வருகின்றனர். 

    மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 471 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 526 ஆக அதிகரித்துள்ளது.

    ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு இன்று மேலும் 85 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 494 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் மாவட்ட வாரியாக விவரம் (வீட்டு தனிமைப்படுத்தப்படுத்தல் உள்பட):-

    அரியலூர் - 129
    செங்கல்பட்டு - 3,141
    சென்னை - 13,744
    கோவை - 1,491
    கடலூர் - 799
    தர்மபுரி - 396
    திண்டுக்கல் - 600
    ஈரோடு - 167
    கள்ளக்குறிச்சி - 935
    காஞ்சிபுரம் - 2,640
    கன்னியாகுமரி - 1,781
    கரூர் - 158
    கிருஷ்ணகிரி - 365 
    மதுரை - 1,952
    நாகை - 248
    நாமக்கல் - 271
    நீலகிரி - 210
    பெரம்பலூர் - 102
    புதுக்கோட்டை - 665
    ராமநாதபுரம் - 795
    ராணிப்பேட்டை - 2,002
    சேலம் - 894
    சிவகங்கை - 631
    தென்காசி - 801
    தஞ்சாவூர் - 963
    தேனி - 1,741
    திருப்பத்தூர் - 370
    திருவள்ளூர் - 3,771
    திருவண்ணாமலை - 1,165
    திருவாரூர் - 570
    தூத்துக்குடி - 2,314
    திருநெல்வேலி - 1,401
    திருப்பூர் - 314
    திருச்சி - 1,201
    வேலூர் - 1,171
    விழுப்புரம் - 876
    விருதுநகர் - 2,612
    விமானநிலைய கண்காணிப்பு 
    வெளிநாடு - 215
    உள்நாடு - 91
    ரெயில் நிலைய கண்காணிப்பு - 11

    மொத்தம் - 53,703

    Next Story
    ×