என் மலர்

  செய்திகள்

  மழை
  X
  மழை

  தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
  சென்னை:

  சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:-

  தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, சேலம், தர்மபுரி, நாகை, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வெப்ப சலனம் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  

  சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு பெய்ய வாய்ப்பு உள்ளது.

  உள் மாவட்டங்களான புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.

  தென்மேற்கு அரபிக்கடல், குமரிக்கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசும். வரும் 29, 30ல் தென்கிழக்கு வங்கக்கடல், தென்மேற்கு அரபிக்கடல், அந்தமான் கடல் பகுதியில் பலத்த காற்று வீசும் என்பதால்  மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  Next Story
  ×