search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கோவை வரும் விமான பயணிகளுக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை

    கோவை வரும் விமான பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
     கோவை:

    கோவைக்கு கடந்த மே மாதம் 26-ந் தேதி முதல் உள்நாட்டு விமான போக்குவரத்தும், கடந்த மாதம் 2-ந் தேதி முதல் வெளிநாட்டு விமான போக்குவரத்தும் தொடங்கியது. இதில் வெளிநாட்டு விமானங்களில் வரும் பயணிகளுக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

    ஆனால் கடந்த 4 நாட்களாக வெளிமாநிலங்களிலிருந்து வரும் உள்நாட்டு பயணிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்வது நிறுத்தப்பட்டது. அவர்களுக்கு தெர்மல் ஸ்கேன் மட்டும் செய்து அனுப்பப்பட்டனர். ஆனால் உள்நாட்டு விமான பயணிகளுக்கும் முன்பு போல் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், பரிசோதனை செய்யாவிட்டால் கொரோனா பாதித்தவர்கள் கோவைக்குள் வருவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறப்பட்டது.

    இதைத்தொடர்ந்து உள்நாட்டு விமான பயணிகளுக்கு வழக்கம் போல் கொரோனா பரிசோதனை செய்ய மாவட்ட கலெக்டர் ராஜாமணி உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்றுக்காலை முதல் கோவை வரும் உள்நாட்டு விமான பயணிகள் அனைவருக்கும் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன. இதுகுறித்து கோவை சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    உள்நாட்டு விமானங்களில் வரும் பயணிகள் ஒன்றிரண்டு பேருக்குத்தான் கொரோனா தொற்று உறுதியானதால் கடந்த 4 நாட்களாக பரிசோதனை நிறுத்தப்பட்டது. ஆனால் தற்போது மீண்டும் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதால் நேற்றுக் காலை முதல் பயணிகளுக்கு சளி மாதிரிகள் விமான நிலைய வளாகத்திலேயே எடுக்கப்படுகின்றன.

    அதன்பின்னர் பயணிகள் கோவை மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்களாக இருந்தால் முகவரியை வாங்கிக் கொண்டு வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு சொல்லி அனுப்பி வைக்கப்படுகிறார்கள். பரிசோதனையில் தொற்று உறுதியானால் அவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். வெளிநாட்டிலிருந்து வரும் விமான பயணிகளுக்கு வழக்கம் போல் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×