search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சித்த மருந்து
    X
    சித்த மருந்து

    கொரோனாவில் இருந்து காத்துக்கொள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் சித்த மருத்துவர் விளக்கம்

    கொரோனாவில் இருந்து காத்துக்கொள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் காணொலி காட்சி மூலம் சித்த மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவன்அருள், உதவி கலெக்டர் வில்சன் ராஜசேகர், ஊரக வளர்ச்சி முகமைத்திட்ட அலுவலர் மகேஷ்பாபு, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அருண் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் தினமும் பொதுமக்களை சந்தித்து தமிழக அரசின் திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள்.

    எனவே அவர்களுக்கு கொரோனா தொற்றில் இருந்து காத்துக்கொள்ள தமிழக அரசு சித்த மருத்துவத்துறை சார்பில் காணொலி காட்சி மூலம் சித்த மருத்துவர் கு.சிவராமன் என்ன சாப்பிட வேண்டும்? என விளக்கம் அளித்துள்ளார்.

    தினமும் காலை எலுமிச்சை பழம், இஞ்சி சாறு பிழிந்து ஒரு டம்ளரில் வெது வெதுப்பான சுடுநீர் குடிக்க வேண்டும். 11 மணிக்கு கொத்தமல்லி சாறு குடிக்க வேண்டும், மதிய உணவில் கொண்டைக்கடலை மற்றும் நிலக்கடலை சுண்டல் சாப்பிடலாம். ஆவி பிடித்தல், கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம், கொத்தமல்லி விதை, தனியா, இஞ்சி சமையலில் சேர்த்துச் சாப்பிட வேண்டும். மேற்கண்ட அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தி உடையதாகும்.

    தினமும் நெல்லிக்காய் விட்டமின் சி சாப்பிட வேண்டும், கொய்யாப்பழம், மாதுளை, ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை சாப்பிடலாம். கொரோனா தொற்றில் இருந்து காத்துக்கொள்ள விட்டமின் சி, விட்டமின் டி, புரோட்டின், சின்ங் மாத்திரைகள் உலகம் முழுவதும் தருகிறார்கள். இவை அனைத்தும் மேற்கூறிய நமது பாரம்பரியத்தில் உள்ளது. ஆகையால் இதனை சாப்பிட்டு கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

    மேற்கண்டவாறு அவர் பேசினார்.

    விரைவில் தமிழக அரசு கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்களை காப்பாற்ற சித்த மருத்துவ முறைப்படி சிகிச்சை அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

    நிகழ்ச்சியில் ஆண்டியப்பனூர் சித்த மருத்துவமனை மருத்துவர் டாக்டர் விக்ரம்குமார் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினார்கள்.
    Next Story
    ×