search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உயிரிழந்த மகன்-தந்தை
    X
    உயிரிழந்த மகன்-தந்தை

    சாத்தான்குளம் வழக்கு- சிசிடிவி பதிவுகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

    சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு தொடர்பான சிசிடிவி பதிவுகளை சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளத்தில் போலீசாரால் தாக்கப்பட்டு தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று தமிழக அரசு அறிவித்து அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டது.

    சிபிஐ விசாரணையை தொடங்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்தது. அதன்படி விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 2 காவலர்கள என 5 பேரை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தது. தொடர்ந்து பல்வேறு கோணங்களில் சிபிசிஐடி அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.

    சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கில் நாளை முதல் விசாரணையை தொடங்க உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது. சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் விசாரணையை தொடங்குகின்றனர். சி.பி.ஐ. அதிகாரிகள் 7 பேர் நாளை காலை சிறப்பு  விமானத்தில் டெல்லியிலிருந்து மதுரை வருகிறார்கள்.

    இந்நிலையில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான மாஜிஸ்திரேட் பறிமுதல் செய்த சிசிடிவி பதிவுகளை சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் மாவட்ட நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:

    ஒப்படைக்கப்பட்ட சிசிடிவி பதிவுகளை நீதிமன்றமும், தடயவியல் துறையும் ஆய்வு மேற்கொள்ளும் என்றும், தந்தை, மகன் மரணம் தொடர்பாக இதுவரை 20 பேரிடம் விசாரணை நடைபெற்றுள்ளதாகவும் சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×