என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா சிறப்பு வார்டில் குடிநீர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி
Byமாலை மலர்8 July 2020 8:02 PM IST (Updated: 8 July 2020 8:02 PM IST)
செய்யாறில் கொரோனா சிறப்பு வார்டில் குடிநீர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.
செய்யாறு:
செய்யாறு டவுன் ஆற்காடு சாலையில் செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்தசில மாதங்களாக வெளி மாநில, மாவட்டங்களில் இருந்து வரும் நபர்களை தனிமைப்படுத்தி கொரோனா தொற்று பரிசோதனை செய்து, தொற்று உறுதியானவர்கள் செய்யாறு மற்றும் திருவண்ணாமலை அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு வந்தனர்.
தற்போது நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களை செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலேயே கொரோனா சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டு, அங்கு கொரோனா தொற்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கொரோனா தாக்கத்தால் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், போதிய அடிப்படை வசதிகள் இன்றி, குடிநீர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. செய்யாறு தாசில்தார் ஆர்.மூர்த்தி மற்றும் போலீசார் நோயாளிகளை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு சமாதானம் செய்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து பழுதடைந்த மின்மோட்டார்களை சரி செய்தனர்.

Next Story
×