search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கிருஷ்ணகிரிக்கு வருபவர்கள் குறித்து தகவல் தெரிவியுங்கள்- கலெக்டர் வேண்டுகோள்

    வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கலெக்டர் பிரபாகர் கேட்டுக் கொண்டுள்ளார்.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் பொதுமக்கள் ஒத்துழைப்போடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக வெளிமாநிலத்திலிருந்தோ, வெளி மாவட்டத்திலிருந்தோ, கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு வருபவர்கள் மற்றும் அத்தியாவசியமான மருத்துவம், திருமணம் மற்றும் இறப்பு போன்ற பல்வேறு பணிகளுக்காக இந்த மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டத்திற்கு சென்று திரும்பியவர்கள் விவரத்தை பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள், பொது மக்கள் உடனடியாக 04343 - 230044, 04343- 234444 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கும் அல்லது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    தற்போது வந்தவர்கள் அவர்கள் தாங்களாகவே முன்வந்து கொரோனா நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளுமாறும், அவரவர் வீடுகளிலேயே 14 நாட்கள் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா வைரஸ் நோய் பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    கொரோனா ஒழிப்பு பணியை வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பை சார்ந்த அலுவலர்களும், பிரதிநிதிகளும் செய்து வருகின்றனர். அவர்களுக்கும் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×