search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்
    X
    சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள்

    சாத்தான்குளம் கொலை வழக்கு- கைதானவர்கள் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்

    சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் உள்பட 5 பேர் பேரூரணி சிறையில் இருந்து மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
    தூத்துக்குடி:

    சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் விசாரணை காவலில் மரணமடைந்தனர். இந்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் படி சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது.
     
    மேலும், இந்த விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், ஒரு காவலர் என 4 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர்கள் அனைவரும் நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இவ்வழக்கில் தலைமறைவு குற்றவாளியாக சிபிசிஐடி போலீசாரால் அறிவிக்கப்பட்டு இருந்த காவலர் முத்துராஜ் தூத்துக்குடியில் உள்ள அரசன்குளத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    மருத்துவ பரிசோதனைக்குப் பின் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட முத்துராஜை வரும் 17-ந்தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர், 2 எஸ்.ஐ.க்கள், 2 காவலர்கள் பேரூரணி சிறையில் இருந்து பாதுகாப்பு காரணமாக மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

    மேலும் உள்நோக்கத்துடன் பொய்யான செய்திகளை இணைய தளத்தில் பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×