search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊரடங்கு உத்தரவு
    X
    ஊரடங்கு உத்தரவு

    ஊரடங்கு உத்தரவை மீறியதாக புறநகர் பகுதியில் 28 ஆயிரம் வழக்குகள் பதிவு

    மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டவர்கள் மீது இதுவரை 28 ஆயிரத்து 106 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
    மதுரை:

    மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் உத்தரவுப்படி, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதற்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்த உத்தரவுகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டவர்கள் மீது இதுவரை 28 ஆயிரத்து 106 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    மேலும் இந்த வழக்குகளின் அடிப்படையில் 36 ஆயிரத்து 172 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 10,161 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 370 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 414 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடமிருந்து 49 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    இதுபோல் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 10 பேர் கைது செய்யப்பட்டதுடன் 66 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    Next Story
    ×