search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஸ்பத்திரி கட்டிடங்களின் கட்டுமான பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
    X
    ஆஸ்பத்திரி கட்டிடங்களின் கட்டுமான பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    நாமக்கல்லில் அரசு மருத்துவ கல்லூரி கட்டுமான பணி- கலெக்டர் ஆய்வு

    நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி கட்டிடங்களின் கட்டுமான பணியை கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    நாமக்கல்:

    நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரியின் கட்டிடங்களுக்கான கட்டுமான பணிக்கு கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரிக்கு ரூ.112.32 கோடி மதிப்பீட்டில் 3 லட்சத்து 28 ஆயிரத்து 161 சதுர அடி பரப்பளவில் 5 கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

    மேலும் ரூ.157.21 கோடி மதிப்பீட்டில் 4 லட்சத்து 48 ஆயிரத்து 333 சதுர அடி பரப்பளவில் ஆஸ்பத்திரிக்கான 9 கட்டிடங்களும், ரூ.69.22 கோடி மதிப்பீட்டில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 998 சதுர அடி பரப்பளவில் 8 இருப்பிட கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகிறது. மருத்துவ கல்லூரியானது தரை தளம் மற்றும் 5 மாடிகள் கொண்டதாக கட்டப்பட உள்ளது.

    அதேபோல் ஆஸ்பத்திரியானது வாகன நிறுத்துமிடம், தரை தளம் மற்றும் 6 மாடிகளுடனும், விடுதி கட்டிடம் 5 மாடிகளுடனும் கட்டப்படுகிறது. இதற்கிடையே நேற்று அரசு மருத்துவ கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரி கட்டிடங்களின் கட்டுமான பணியை கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அங்கிருந்த கட்டுமான பொருட்களின் தரம் குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். மேலும் பணியாளர்களை பாதுகாப்பாக கட்டுமான பணிகளை மேற்கொள்ளவும், காலதாமதம் இன்றி விரைந்து முடிக்கவும் கலெக்டர் மெகராஜ் அறிவுறுத்தினார்.
    Next Story
    ×