search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காரில் கயிறு கட்டி பிரின்ஸ் எம்எல்ஏ இழுத்துச் சென்ற போது எடுத்த படம்.
    X
    காரில் கயிறு கட்டி பிரின்ஸ் எம்எல்ஏ இழுத்துச் சென்ற போது எடுத்த படம்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரசார் போராட்டம்

    குழித்துறையில் ஊரடங்கை மீறி பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 155 பேரை போலீசார் கைது செய்தனர்.
    களியக்காவிளை:

    பெட்ரோல், டீசல் விலையை தினமும் உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்தும், இந்த விலை உயர்வை குறைக்க வலியுறுத்தியும் நேற்று குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் குழித்துறை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், எம்.எல்.ஏ.வுமான ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். மேலும், விஜயதரணி எம்.எல்.ஏ. உள்பட ஏராளமான காங்கிரசார் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

    இதனை தொடர்ந்து போராட்டக்காரர்களுடன் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் ஊரடங்கை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 155 பேரை போலீசார் கைது செய்து ஒரு மண்டபத்தில் அடைத்தனர். தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

    இதேபோல் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து குளச்சல் அண்ணாசிலை சந்திப்பில் காங்கிரஸ் சார்பில் நூதன போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு பிரின்ஸ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். போராட்டத்தின் போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக காங்கிரசார் கோஷங்களை எழுப்பினர்.

    மேலும், போராட்டத்துக்கு காரை கயிறு கட்டி இழுத்து வந்து தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட செயலாளர் தர்மராஜ், துணைத்தலைவர் முனாப், குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் எனல்ராஜ், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் செயலாளர் சபீன், வட்டார தலைவர் டென்னீஸ், நகர தலைவர் சந்திரசேகர், துணைத்தலைவர் லாலின், கல்லுக்கூட்டம் பேரூர் தலைவர் மனோகரசிங், தென்மண்டல சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் ஜெபசீலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×