search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சொகுசு காரில் காசியின் நண்பர் தினேஷ்
    X
    சொகுசு காரில் காசியின் நண்பர் தினேஷ்

    பெண்களை மிரட்டி பணிய வைப்பதில் காசியை மிஞ்சிய தினேஷ்

    பெண்களை மிரட்டி பணிய வைப்பதில் காசியை மிஞ்சும் வகையில் தினேஷ் செயல்பட்டுள்ளதாக போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கணேசபுரம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சுஜி என்ற காசி (வயது 26), இவர் மீது பெண் டாக்டர் உள்பட பல்வேறு பெண்கள் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் காசி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் காசிக்கு உடந்தையாக இருந்த அவருடைய நண்பர் டேசன் ஜினோ (19) என்பவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் காசி தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் காசியையும், அவருடைய நண்பர் டேசன் ஜினோவையும் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது காசிக்கு உதவியாக செயல்பட்ட அவருடைய மற்றொரு நண்பரான கணேசபுரத்தை சேர்ந்த தினேஷ் என்பவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

    முன்னதாக அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

    காசி

    அதாவது காசி பெண்களை மிரட்டுவதற்கு தினேசை நன்றாக பயன்படுத்தி உள்ளதாக தெரிகிறது. காசியின் தொடர்பை துண்டித்த பெண்களின் செல்போன் நம்பரை தினேசுக்கு அனுப்புவது பின்னர் தினேஷ் அந்த நம்பருக்கு தொடர்பு கொண்டு ஆபாசபடங்களை சமூக வலைதளத்தில் பரப்பிவிடுவதாக மிரட்டுவது உள்ளிட்ட செயல்களில் காசியுடன் சேர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

    காசியை மிஞ்சும் வகையில் தினேஷ் செயல்பட்டுள்ளது சி.பி.சி.ஐ.டி. போலீசாரையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அதாவது, தினேஷ், கோவையில் பட்டப்படிப்பை முடித்துள்ளார். தற்போது சென்னையில் சட்டப்படிப்பு படித்து வருவதாக கூறப்படுகிறது.

    காசியுடன் சேர்ந்து வசதியான குடும்பத்து இளைஞர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டு விலை உயர்ந்த கார்களில் வலம் வந்துள்ளனர். அதாவது அந்த கார்களிலேயே பெண்களுடன் பல்வேறு ஊர்களுக்கு சென்று வந்ததாக தெரிகிறது. அப்போது பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களை எடுத்துக் கொண்டு பின்னர் அந்த படங்களை காட்டி பெண்களிடம் பணம் பறிப்பது, ஆசைக்கு இணங்க வைப்பது உள்ளிட்ட படுபாதக செயல்களில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது.

    காசி, தினேஷ் மற்றும் அவர்களது கூட்டாளிகள் தங்களது திட்டத்துக்கு ஒத்துழைக்காத இளம்பெண்களை பல்வேறு வகைகளில் மிரட்டியதாக தெரிகிறது. சில பெண்களின் வங்கி கணக்குகள் இவர்களது வங்கி கணக்குடன் இணைக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே தினேசின் கூட்டாளி ஒருவர் பற்றிய விவரம் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

    அந்த நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. காசி, தினேசின் நண்பர்கள் சிலரையும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர்.

    Next Story
    ×