search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முல்லைப்பெரியாறு அணை
    X
    முல்லைப்பெரியாறு அணை

    தென்மேற்கு பருவமழை தொடங்கியது- முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் உயர வாய்ப்பு

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதை அடுத்து முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர வாய்ப்பு உள்ளது.
    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை ஜூன் 1-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று கேரளாவில் மழை பெய்யத் தொடங்கியது.

    இந்த ஆண்டு இயல்பை விட கூடுதலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல் உள்பட 17மாவட்டங்களில் சாரல் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    லட்சத்தீவு அருகே அரபிக்கடலில் வலுவான காற்றழுத்த பகுதி நாளை புயலாக மாறி வடக்கு திசையில் செல்லும் வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கேரளாவின் உள் மாவட்டங்கள் மற்றும் இடுக்கி மாவட்டத்திலும் மழை பெய்தது. இந்த மழை தொடரும் பட்சத்தில் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    அணையின் நீர்மட்டம் 112.75 அடியாக உள்ளது. வருகிற 125 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. மழை தொடர்ந்து பெய்து அணையின் நீர்மட்டம் உயர வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

    வைகை அணையின் நீர்மட்டம் 38.31 அடியாக உள்ளது. 8 கன அடி நீர் வருகிறது. 72 கன அடி நீர் மதுரை மாநகர குடிநீருக்காக திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 36.85 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 62.64 அடியாக உள்ளது. வருகிற 3 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    பெரியாறு 7.9, தேக்கடி 1.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×