search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமணம்
    X
    திருமணம்

    பொள்ளாச்சியில் கொரோனா தொற்றால் வாலிபர் திருமணம் நிறுத்தம்

    பொள்ளாச்சியில் மணமகன் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானதையடுத்து அதிகாரிகளின் அறிவுரைப்படி நடக்க இருந்த திருமணம் ரத்து செய்யப்பட்டது.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த பெண்ணுக்கும், டெல்லியில் வேலை பார்த்த வாலிபருக்கும் நேற்று பொள்ளாச்சி தாளக்கரை ஊராட்சியில் திருமணம் நடக்க இருந்தது.

    போதிய போக்குவரத்து வசதியில்லாததால் கடந்த 29-ந்தேதி மணமகன் தனது குடும்பத்துடன் டெல்லியில் இருந்து டிராவல்சில் புறப்பட்டார். இவர்களுடன் தேனியை சேர்ந்த 3 பேரும் பயணம் செய்தனர்.

    தேனியை சேர்ந்தவர்கள் திண்டுக்கல்லில் இறங்கி விட்டனர். மணமகன் மற்றும் அவரது குடும்பத்தினர் பொள்ளாச்சி தாளக்கரை ஊராட்சிக்கு வந்தனர்.

    மணப்பெண்ணின் வீட்டில் வாழைமரம், தோரணங்கள் கட்டப்பட்டு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மணமகன் வீட்டார் பெண்ணின் உறவினர் வீட்டில் தங்கினர்.

    கிருமி நாசினி தெளித்த தீயணைப்பு துறையினர்

    இந்நிலையில் தேனியை சேர்ந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் அவர்கள் 3 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

    இதனையடுத்து பொள்ளாச்சி சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மணமகன் தங்கிருந்த வீட்டுக்கு சென்றனர். அங்கிருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

    அதில் மணமகன் உள்பட 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து அதிகாரிகளின் அறிவுரைப்படி நேற்று நடக்க இருந்த திருமணம் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து மணமகன் உள்பட 5 பேரும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, மணமகன், அவரது தாய், தந்தை மற்றும் அவரது சகோதரர், சகோதரி என 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    டிராவல்ஸ் டிரைவருக்கு கொரோனா தொற்று இல்லை. இருந்தாலும் அவர் கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு கண்காணித்து வருகிறோம் என்றனர்.


    Next Story
    ×