என் மலர்

  செய்திகள்

  கைது
  X
  கைது

  ஊரடங்கு உத்தரவு மீறல்- தமிழகத்தில் 5,64,440 பேர் கைதாகி ஜாமினில் விடுதலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் வெளியே சுற்றிய 5,64,440 பேர் கைதாகி ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
  சென்னை:

  கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த உத்தரவை  மீறி தேவை இல்லாமல் வாகனங்களில் ஊர் சுற்றுபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவர்கள் சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகிறது.

  தமிழகம் முழுவதும், 5 லட்சத்து 64 ஆயிரத்து 440 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 லட்சத்து 28 ஆயிரத்து 459 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 லட்சத்து 38 ஆயிரத்து 720 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.9,31,78,224 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×