search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஸ்கள் (கோப்புப்படம்)
    X
    பஸ்கள் (கோப்புப்படம்)

    கோவையில் நாளை முதல் 506 பஸ்கள் இயக்கம்

    கோவை மாவட்டத்தில் இயங்க உள்ள 506 பஸ்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் பஸ்களை இயக்க டிரைவர்கள், கண்டக்டர்கள் தயார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    கோவை:

    ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பஸ்களின் இயக்கம் முழுவதுமாக நிறுத்தப்பட்டது.

    தற்போது ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதனால் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களை தவிர மற்ற மண்டலங்களில் நாளை முதல் பொது போக்குவரத்து தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கோவை மண்டலத்தில் நாளை முதல் 50 சதவீத பஸ்கள் இயங்க உள்ளது. கோவை மண்டலம் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது.

    கோவை மாவட்டத்தில் மட்டும் 1, 018 பஸ்கள் உள்ளன. இதில் 50 சதவீத பஸ்கள் நாளை முதல் இயங்க உள்ளது. எனவே கோவை மாவட்டத்தில் இயங்க உள்ள 506 பஸ்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் பஸ்களை இயக்க டிரைவர்கள், கண்டக்டர்கள் தயார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    பஸ்களில் உள்ள மொத்த இருக்கையில் 60 சதவீத இருக்கையில் மட்டுமே பயணிகள் அமர அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. பஸ்கள் மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே இயக்கப்படும். வேறு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளுக்கு செல்லாது. மண்டலத்துக்குட்பட்ட பஸ்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு இ-பாஸ் தேவை இல்லை. இதே போல தனியார் பஸ்கள் அங்கீகரிக்கப்பட்ட தடங்களில் மட்டுமே இயங்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×