search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிறப்பு ரெயில்
    X
    சிறப்பு ரெயில்

    திருப்பூரில் இருந்து இன்று மேலும் 3 சிறப்பு ரெயில்கள் இயக்கம்

    திருப்பூரில் இருந்து இன்று மேலும் 3 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்களில் தலா 1600 பேர் வீதம் 4 ஆயிரத்து 800 பேர் சொந்த ஊர் செல்கின்றனர்.
    திருப்பூர்:

    கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் தங்கி வேலை பார்க்கும் பீகார், ஒடிசா, உத்தரபிரதேசம், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், அசாம் உள்ளிட்ட வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அவர்களது சொந்த ஊருக்கு சிறப்பு ரெயில் மூலம் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

    இதுவரை திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 17 சிறப்பு ரெயில்கள் மூலம் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.

    இந்த நிலையில் இன்று மதியம் 2 மணிக்கு பீகாருக்கும், இரவு 7 மணிக்கு ஒடிசாவுக்கும், இரவு 11 மணிக்கு பீகாருக்கும் என மொத்தம் 3 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரெயில்களில் தலா 1600 பேர் வீதம் 4 ஆயிரத்து 800 பேர் சொந்த ஊர் செல்கின்றனர். முன்னதாக இந்த ரெயில்களில் செல்லும் வடமாநில தொழிலாளர்கள் பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருப்பூர் ஜெய்வாய்பாய் பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். அங்கு அவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்பது குறித்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.


    Next Story
    ×