search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம்- தமிழக அரசு உத்தரவு

    காவிரி டெல்டா பகுதியில் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக தலைமைச்செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    அரியலூர், கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் காவிரி டெல்டா பகுதியில் உள்ள கால்வாய்கள், கிளை நதிகள், உபரி நீர் வாய்க்கால்கள் ஆகியவற்றில் தூர் எடுப்பது உள்பட 392 பணிகளுக்கு இந்த ஆண்டில் ரூ.67.25 கோடியை அனுமதித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த பணிகள் அனைத்தும் விரைவாக 10 நாட்களுக்குள் முடிவடைவதை கண்காணிக்கும் வகையில் சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளை மாவட்டந்தோறும் நியமித்து அரசு ஆணையிட்டு உள்ளது. அந்த வகையில் தஞ்சை மாவட்டத்திற்கு வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார்.

    மற்ற மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அந்த திட்டங்கள் முழுமையாக நிறைவேறும் வகையில் சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளின் பணிகளை பொதுப்பணித்துறையின் முதன்மை செயலாளர் ஒருங்கிணைக்க வேண்டும். உடனடியாக பணியில் சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் இறங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×