search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்.ராதாகிருஷ்ணன்
    X
    பொன்.ராதாகிருஷ்ணன்

    ரூ.20 லட்சம் கோடி திட்டத்தால் பொருளாதார வளர்ச்சி மேம்படும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

    மத்திய அரசு அறிவித்த ரூ.20 லட்சம் கோடி திட்டத்தால் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    நாகர்கோவில்:

    முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கொரோனா பாதிப்பு இருந்துவரும் வேளையில் நாட்டை மீட்டு எடுக்கும் பணியில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது. பல்துறையை சேர்ந்த மக்கள் மற்றும் அனைத்துத்துறையை மேம்படுத்த ரூ.20 லட்சம் கோடியை செலவு செய்யும் திட்டத்தை மோடி அறிவித்து உள்ளார்.

    அந்த அடிப்படையில் 2 நாட்கள் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தொடர்ந்து அறிவிப்பு செய்துள்ளார். இதில் பல திட்டங்களை அறிவித்து இருக்கிறார். இந்த திட்டங்களை பயன்படுத்தும் போது நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி மேம்படும். வேலைவாய்ப்பு உருவாகும்.

    கூட்டுறவு அமைப்புகள் தொடர்ந்து எடுத்த முயற்சி காரணமாக நாட்டில் 560 லட்சம் லிட்டர் பால் தினசரி கொள்முதல் செய்யப்பட்டது. பிரதமரின் விவசாய நிதி திட்டத்தின்கீழ் ரூ.18 ஆயிரம் கோடிக்கு மேல் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது.

    மேலும் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை பிற மாநிலங்களுக்கும் சென்று விற்பனை செய்யலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் விளைபொருட்களை குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலை வராது, பயிர் பாதுகாப்பு திட்டத்தில் 2 மாதத்தில் ரூ.6,400 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் விவசாயிகளின் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்த 50 சதவீதம் போக்குவரத்து கட்டண சலுகை வழங்கப்பட்டு உள்ளது. இதனால் இடைத்தரகர்கள் குறைய வாய்ப்பு உள்ளது.

    இதேபோல் மீன்துறை, கால்நடைத்துறைகளுக்கு என தனியாக திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த துறைகள் மேம்படும், மூலிகை உற்பத்தி செய்ய கங்கை நதி கரையில் 800 ஹெக்டேர் பரப்பில் மூலிகை செடிகள் வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தேனீ வளர்ப்புக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது நிர்வாகிகள் தேவ், ராஜன், அஜித்குமார், நாகராஜன், ராகவன், சுனில் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×