search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    நாளை மறுநாள் முதல் குறைந்த அளவில் பஸ்களை இயக்க முடிவு

    நாளை மறுநாள் முதல் ஊரடங்கு அடுத்த கட்ட தளர்வாக அரசு பேருந்துகள் குறைந்த அளவில் ஓடத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    சென்னை:

    கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியதை அடுத்து கடந்த மார்ச் மாதம் முதல் அமலில் இருந்துவரும் ஊரடங்கு படிப்படியாக தளர்வு செய்யப்பட்டு வருகிறது.

    வருகிற 17-ந்தேதிக்கு பிறகு (நாளை மறுநாள் முதல்) பஸ்களை இயக்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருந்தது. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பணிமனைகளில் பேருந்துகளை இயக்குவது குறித்து பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் இயக்கப்படுவதற்கு வசதியாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.

    நாளை மறுநாள் (திங்கட்கிழமை முதல்) அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி அரசு அலுவலகங்கள் முழு வீச்சில் செயல்பட தொடங்க உள்ளன.

    இதையடுத்து குறைந்த அளவில் முதல்கட்டமாக பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி 3-ல் ஒரு பகுதி பேருந்துகளை இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாளை மறுநாள் முதல் ஊரடங்கு அடுத்த கட்ட தளர்வாக அரசு பேருந்துகள் ஓடத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை தமிழக அரசு இன்று அல்லது நாளை வெளியிடும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

    Next Story
    ×