search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் காமராஜ்
    X
    அமைச்சர் காமராஜ்

    மேட்டூர் அணை திறப்பது குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார்- அமைச்சர் காமராஜ்

    மேட்டூர் அணையை திறப்பது குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்று அமைச்சர் இரா.காமராஜ் கூறினார்.
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியத்தில் ஆனைக்குப்பம், பில்லூர் ஊராட்சிகளில் குடிமராமத்து திட்டப்பணிகளின் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை வகித்தார். குடிமராமத்து திட்டப்பணிகளை அமைச்சர் இரா.காமராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் குறிப்பாக காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயம் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதற்காக இதனை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இதன் மூலம் ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தவும் தடை செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது. மேட்டூர் அணையை திறப்பது குறித்து தமிழக முதல்வர் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார். அந்த மகிழ்ச்சியான செய்தியை உங்களோடு மக்களில் ஒருவனாக இருந்து ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன்.

    தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சிறப்புத் திட்டங்களில் ஒன்றான குடிமராமத்து பணி செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளின் 10 சதவீத பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்காக 10 சதவீத பங்களிப்பை முன்கூட்டியே விவசாயிகள் செலுத்த வேண்டும் என்ற நிலை இருந்தது. தற்போது இதனை மாற்றம் செய்து பணிகளுக்கு பின்னாலும் பங்களிப்பு நிதியை செலுத்தலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்த ஆண்டு தமிழகத்தில் ரூ.499.77 கோடி மதிப்பில் குடிமராமத்து பணி தொடங்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் ரூ.20.23 கோடி மதிப்பில் 88 பணிகள் நடைபெற உள்ளது. குறுவை சாகுபடிக்கு தேவையான அளவுக்கு விதை நெல், உரம், பூச்சிமருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் இராம.குணசேகரன், சி.பி.ஜி.அன்பழகன், ஒன்றியக்குழுத் தலைவர் விஜயலட்சுமி குணசேகரன், மாவட்ட கவுன்சிலர் ஏ.என்.ஆர்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×