search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    விழுப்புரம் சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி- முதலமைச்சர் அறிவிப்பு

    விழுப்புரம் அருகே எரித்துக் கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
    திருவெண்ணெய்நல்லூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் ஜெயஸ்ரீ (15) எரித்துக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 2 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் கலியபெருமாள், முருகன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கி அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

    இந்நிலையில் விழுப்புரம் அருகே எரித்துக் கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

    இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×