search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜிகே வாசன்
    X
    ஜிகே வாசன்

    தமிழக அரசு கேட்டுள்ள நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்- ஜி.கே.வாசன் கோரிக்கை

    கொரோனா தடுப்பு பணிகளுக்கு தமிழக அரசு கேட்டுள்ள நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்று ஜி.கே.வாசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:-

    தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும், கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பிலிருந்து பொது மக்களை படிப்படியாக மீட்கவும் தமிழக முதல்-அமைச்சர் கேட்டுக்கொண்டதற்கு ஏற்ப மத்திய அரசு நிதியை வழங்கவும், கோரிக்கைகளை நிறைவேற்றவும் பிரதமர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குறிப்பாக கொரோனா தடுப்பு உபகரணங்களை வாங்குவதற்கு 1,000 கோடி ரூபாயை உடனடியாக வழங்கவும், 10 ஆயிரம் பிசிஆர் பரிசோதனை கருவிகளை அனுப்பவும், மத்திய அரசின் திட்டத்துக்கு கீழ் வரும் பயனாளிகள் உள்பட அனைத்து ரே‌ஷன் அட்டைதாரருக்கும் இலவசமாக உணவு தானியங்களை வழங்கும் வகையில் கூடுதலாக அவற்றை தமிழகத்துக்கு வழங்கவும், அரிசி கொள்முதலை ஊக்குவிக்கும் வகையில் சி.எம்.ஆர். என்ற நெல் அரவை மானியத்தொகை ரூ.1,321 கோடியை வழங்கவும், விவசாயப் பொருள்கள் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு போக்குவரத்து கட்டணத்தில் மானியம் வழங்க ஆவண செய்யவும், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பயனாளிகளுக்கு நேரடியாக பணம் அளிக்க அனுமதிக்கவும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வங்கிக்கடனுக்கான வட்டியை 6 மாதங்களுக்கு ரத்து செய்யவும், ஜிஎஸ்டி வருமான வரி செலுத்த 6 மாத கால அவகாசம் அளிக்கவும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளையும், கருத்துக்களையும் தமிழக முதல்வர் பாரதப் பிரதமருக்கு கடிதம் மூலம் அனுப்பி வைத்திருக்கிறார். இதனையெல்லாம் பிரதமர் கனிவோடு பரிசீலனை செய்து நிறைவேற்ற வேண்டும்.

    பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவிடுவதற்கும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டிய அவசியமும், அவசரமும், கட்டாயமும் இப்போது ஏற்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    Next Story
    ×