என் மலர்

  செய்திகள்

  கேரளாவில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த குழந்தை, குமரி எல்லையில் தாயிடம் ஒப்படைக்கப்பட்ட போது எடுத்த படம்.
  X
  கேரளாவில் சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்த குழந்தை, குமரி எல்லையில் தாயிடம் ஒப்படைக்கப்பட்ட போது எடுத்த படம்.

  பிறந்ததும் உடல் நீலநிறமாக மாறியதால் தீவிர சிகிச்சை - குணமடைந்த குழந்தை தாயிடம் ஒப்படைப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிறந்ததும் உடல் நீலநிறமாக மாறிய நாகர்கோவில் குழந்தைக்கு கேரள ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்தது. பின்னர் குழந்தை தாயிடம் ஒப்படைக்கப்பட்டது.
  நாகர்கோவில்:

  நாகர்கோவில் இடலாக்குடியை சேர்ந்தவர் பைசல். இவருடைய மனைவி சோபியா நசீம் பானு. இந்த தம்பதிக்கு கடந்த 14-ந் தேதி நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால் இந்த குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு உடல் நிலை மோசமானது. உடல் நீலநிறமாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

  பின்னர் மேல்சிகிச்சைக்காக கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அந்த குழந்தையை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. ஊரடங்கால் அதில் பல சிரமம் ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் எடுத்த நடவடிக்கையால் குழந்தை சுமார் 280 கி.மீ பயணத்துக்கு பிறகு அந்த ஆஸ்பத்திரியை சென்றடைந்தது.

  அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. குழந்தையின் உயிரை காப்பாற்ற டாக்டர்கள் கடுமையாக போராடினர். டாக்டர்களின் தீவிர முயற்சியால் குழந்தையின் உடல்நிலை படிப்படியாக சீராகி முழுமையாக குணமடைந்தது.

  இதற்கிடையே அந்த குழந்தையின் தாய் சோபியா நசீம் பானு, பிறந்த உடன் பார்த்த குழந்தையை, மறுநாளே சிகிச்சைக்காக கொண்டு சென்றதால் பரிதவித்தார். இந்த நிலையில் குழந்தை காப்பாற்றப்பட்டு விட்டது என்பதை எண்ணியதும், பூரிப்படைந்தார். பிறகு, குழந்தையை பெற்றுகொள்வதற்காக குமரி மாவட்ட எல்லைக்கு தாய் சோபியா நசீம் பானு மற்றும் குடும்பத்தினர் சென்றனர்.

  தமிழக-கேரள எல்லையான களியக்காவிளை பகுதியில் நாகர்கோவில் மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்சில் குழந்தையின் தாய் தயார் நிலையில் இருந்தார். அப்போது கேரள ஆம்புலன்ஸ் வந்தது. அந்த ஆம்புலன்சில் இருந்தவர்கள், குழந்தையை சோபியா நசீம் பானுவிடம் ஒப்படைத்தனர். குழந்தையை பார்த்த மகிழ்ச்சியில் அவர் திக்குமுக்காடினார். ஆனந்த கண்ணீருடன் குழந்தையை பெற்ற அவர், அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

  ஊரடங்கு சமயத்தில், பல இடைஞ்சலுக்கு இடையே குழந்தையை ஆம்புலன்சில் கொண்டு செல்வதற்கு உதவிய முதல்-மந்திரி பினராயி விஜயன், குமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் இருமாநில போலீசார், சிகிச்சை அளித்த டாக்டர்களுக்கு குடும்பத்தினர் நன்றி தெரிவித்து கொண்டனர்.

  இருமாநில எல்லையில் நடந்த இந்த நெகிழ்ச்சி சம்பவம் அங்கு பரபரப்பாக பேசப்பட்டது. 
  Next Story
  ×