என் மலர்

  செய்திகள்

  கொரோனா வைரஸ்
  X
  கொரோனா வைரஸ்

  கொரோனா சந்தேகம்: கோவையில் இ.எஸ்.ஐ., தனியார் ஆஸ்பத்திரிகளில் 42 பேர் அனுமதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவையில் இ.எஸ்.ஐ. மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா சந்தேகத்துடன் 42 பேர் அனுமதிக்கப்பட்டனர்.
  கோவை:

  கோவை மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 141 ஆக உள்ளது. நேற்றும் யாருக்கும் கொரோனா அறிகுறி இல்லை. கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த கோவையை சேர்ந்த 3 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினார்கள். முன்னதாக அவர்கள் 3 பேரின் சளி, ரத்த மாதிரி மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட 3 பேரும் 14 நாட்கள் தனிமையை கடைபிடிக்க வேண்டும். வெளியே எங்கும் செல்லக்கூடாது என்று டாக்டர்கள் அறிவுரை வழங்கினார்கள்.

  கொரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அது போன்று துடியலூர் போலீஸ் நிலையத்துக்கு சென்ற சமூக ஆர்வலருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. இதனால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார். அங்கு நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் நேற்று வீடு திரும்பினார்.

  இந்த நிலையில் நேற்று ஒருநாளில் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 42 பேர் கொரோனா சந்தேகத்துடன் கோவை இ.எஸ்.ஐ. மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 24 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 18 பேரும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 10 பேர் ஆண்கள், 32 பேர் பெண்கள் ஆவர். இந்த 42 பேரின் ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. மேலும் கொரோனா சந்தேகம் காரணமாக அனுமதிக்கப்பட்டவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
  Next Story
  ×