என் மலர்

  செய்திகள்

  புகார்
  X
  புகார்

  சென்னை பெண் டாக்டரை ஏமாற்றிய வாலிபர் மீது மேலும் ஒரு பெண் புகார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகர்கோவில் அருகே 100 பெண்களை மிரட்டி பணம் பறித்த வாலிபர் மீது மேலும் ஒரு பெண் போலீசில் புகார் அளித்துள்ளார்.
  நாகர்கோவில்:

  நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர் காசி என்ற சுஜி (வயது26).

  இவர் சமூக வலைதளங்கள் மூலம் பெண்களுடன் தொடர்பை ஏற்படுத்தி அவர்களுடன் பழகி வந்தார். இதில் சென்னையை சேர்ந்த பெண் டாக்டர் ஒருவரும் வீழ்ந்தார்.

  அவரை காதலிப்பதாக கூறிய காசி, பெண் டாக்டருடன் நெருக்கமாக இருக்கும் படங்களை எடுத்து கொண்டார். அந்த படங்களை காட்டி மிரட்டி அவரிடம் லட்சக்கணக்கில் பணம், நகைகளை வாங்கினார்.

  காசி பல பெண்களை இதுபோல மிரட்டி பணம் பறிப்பதை அறிந்து கொண்ட பெண் டாக்டர், இது பற்றி குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் கொடுத்தார். அவர் விசாரணை நடத்தி காசியை கைது செய்தார்.

  அவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் அவரை போலீசார் நாங்குநேரி ஜெயிலிலும் அடைத்தனர்.

  காசியின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தி அவரது செல்போன் மற்றும் லேப் - டாப்பை கைப்பற்றி சோதனை செய்தனர்.

  இதில் காசியுடன் ஏராளமான பெண்கள் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் இருந்தன. இதன்மூலம் காசி, சென்னை பெண் டாக்டர் மட்டுமின்றி மேலும் பல பெண்களை மிரட்டி பணம் பறித்திருக்கலாம் என்று போலீசார் கருதினர். எனவே காசியால் பாதிக்கப்பட்ட பெண்கள் அவர் மீது புகார் கொடுக்கலாம் என்றும் அவர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்படாது எனவும் போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர்.

  இந்த அறிவிப்பை தொடர்ந்து நாகர்கோவிலை சேர்ந்த ஒரு பெண், காசி மீது புகார் கொடுத்துள்ளார். அதில் 2 ஆண்டுகளுக்கு முன்பு காசி, தன்னுடன் தொடர்பில் இருந்ததாகவும், அப்போது தாயாருக்கு புற்றுநோய் இருப்பதாக கூறி சிகிச்சைக்கு பணம் கேட்டார்.

  நானும் 2 பவுன் நகை மற்றும் பணம் கொடுத்தேன். அதனை பெற்றுக்கொண்ட பின்பு அவர் அதனை திருப்பி தராமல், என்னை மிரட்டியதோடு, எனது ஆபாச படத்தையும் பேஸ்புக்கில் வெளியிட்டு விடுவேன் எனக்கூறினார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறியிருந்தார். அதன்பேரில் நேசமணி நகர் போலீசார் காசி மீது புதிதாக இன்னொரு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
  Next Story
  ×