search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்.பி.உதயகுமார்
    X
    ஆர்.பி.உதயகுமார்

    முழு ஊரடங்குக்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்-ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள்

    முழு ஊரடங்குக்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மதுரை:

    அமைச்சர் ஆர்.பி.உதய குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கிராமப்புறங்களில் கொரோனா நோய் தொற்று கட்டுப்பாட்டில் வந்துள்ளதை காண்கின்றோம். ஆனால் நகர் புறங்களில் குறிப்பாக மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதிகளில் இந்த நோய் தொற்று தொடர்ந்து பரவுவதற்கு அதிகம் வாய்ப்பு உள்ளதை நம்மால் உணர முடிகிறது.

    முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கையாக எடுத்ததன் மூலம் உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசிலிருந்து தமிழக மக்களை காப்பாற்றி உள்ளார்.

    மருத்துவம் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் அரசுக்கு கூறி வருகின்ற அறிவுரைகளையும் முக்கியமானதாக நகர் புறங்களில் மக்கள் நெருக்கம் அதிக உள்ள பகுதிகளில் ஊரடங்கை மேலும் கடுமையாக்கினால் மட்டுமே இந்த நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும் என்று கூறியுள்ளனர்.

    இதை நாம் பார்க்கின்ற போது சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய மாநகராட்சி பகுதிகளில் அதிக அளவில் இநத நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளதால் கொரோனா நோய் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாக தீவிரமாக பரவும் கடும் நோய் என்பதால் இதை கட்டுப்படுத்த முதல்-அமைச்சர் செயல்படுததி வருகின்ற தொலைநோக்கு நடவடிக்கைகளுக்கு நாம் முழு ஆதரவையும், ஒத்து ழைப்பையும் வழங்குவோம்.

    மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×