என் மலர்

  செய்திகள்

  திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி
  X
  திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி

  ஆவடி, பூந்தமல்லி, திருநின்றவூர், வில்லிவாக்கம் பகுதியிலும் முழு ஊரடங்கு- கலெக்டர்கள் அறிவிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை மாநகராட்சி அருகே உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட பகுதிகளிலும் நாளை முதல் 29-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்று அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
  திருவள்ளூர்:

  திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

  தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில மாநகராட்சிகளில் தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

  அதன் அடிப்படையில் சென்னை பெருநகர மாநகராட்சி பகுதிக்கு அருகிலுள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆவடி மாநகராட்சி, பூந்தமல்லி நகராட்சி, மீஞ்சூர், பொன்னேரி, நாரவாரிக் குப்பம், திருமழிசை, திருநின்றவூர் பேரூராட்சிகள் மற்றும் வில்லிவாக்கம் ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து கிராம பஞ்சாயத்துகளும்,

  புழல் ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து கிராம பஞ்சாயத்துகளும், பூந்தமல்லி ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து கிராம பஞ்சாயத்துகளும், சோழவரம் ஒன்றியத்தில் சோழவரம், பாடியநல்லூர், நல்லூர், கும்பனூர், ஆங்காடு, விச்சூர், வெள்ளிவாயல், பெருங்காவூர், அலமாதி ஆகிய 9 கிராம பஞ்சாயத்துகளும் மீஞ்சூர் ஒன்றியத்தில் மேலூர், சுப்புரெட்டிபாளையம், கொண்டகரை, வள்ளூர், அத்திபட்டு, நாலூர், வன்னிப்பாக்கம், சிறுவாக்கம் மற்றும் வெள்ளி வாயல்சாவடி ஆகிய 9 கிராம பஞ்சாயத்துகளும் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் 26.4.2020 காலை 6 மணி முதல் 29.4.2020 இரவு 9 மணி வரை ஊரடங்கு முழுமையாக அமல்படுத்தப்படும்.

  தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு வழங்கப்படும் உணவுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னை மாநகராட்சிக்கு அருகில் உள்ள மாங்காடு, குன்றத்தூர் பேரூராட்சிகள், குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஐயப்பன்தாங்கல், பரணி புத்தர், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், கோவூர், தண்டலம், தரப்பாக்கம், இரண்டாம் கட்டளை, மவுலிவாக்கம், பெரிய பணிச்சேரி, நந்தம்பாக்கம், சிறுகளத்தூர், கொல்லச்சேரி, கொழுமணிவாக்கம், சிக்கராயபுரம், பூந்தண்டலம், மலையம்பாக்கம், மலையம் பாக்கம், திருமுடி வாக்கம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட காஞ்சிபுரம் மாவட்டப் பகுதிகளில் முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படும் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

  செங்கல்பட்டு மாவட்டத்தில், சென்னை மாநகராட்சி பகுதிக்கு அருகில் உள்ள தாம்பரம், பல்லாவரம் பெரு நகராட்சிகள், பம்மல், அனகாபுத்தூர், செம்பாக்கம் நகராட்சிகள், பீர்க்கன்கரணை, பெருங்களத்தூர், சிட்லபாக்கம், திருநீர்மலை, மாடம்பாக்கம் பேரூராட்சிகள், புனித தோமையர் மலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அகரம்தென், மதுரப்பாக்கம், கோவிலம்பாக்கம், மேடவாக்கம், வேங்கை வாசல், மூவரசம்பட்டு, திரிசூலம், பொழிச்சலூர், கவுல்பஜார், சித்தாலப்பாக்கம், ஒட்டியம்பாக்கம், திருவஞ்சேரி, முடிச்சூர், பெரும்பாக்கம் மற்றும் நன்மங்கலம் ஆகிய 15 கிராம ஊராட்சிகள் மற்றும் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த கானாத்தூர் ரெட்டிக்குப்பம், முட்டுக்காடு ஆகிய 2 கிராம ஊராட்சிகள், சென்னை பெருநகர காவல் எல்லைக்குள் வரும் செங்கல்பட்டு மாவட்ட பகுதிகள் முழுவதும் ஊரடங்கு முழுமையாக அமுல்படுத்தப்படும் என்று கலெக்டர் ஜான்லூயிஸ் அறிவித்திருக்கிறார்.
  Next Story
  ×