search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மதுரை
    X
    மதுரை

    மதுரையில் நாளை முதல் ஊரடங்கு கடுமையாகிறது

    மதுரை மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் சமூக பரவலாக மாறாத வகையில் பொதுமக்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் இத்தகைய தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. வருகிற 3ந்தேதி வரை இந்த ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்க சுகாதாரத்துறையும் அறிவுறுத்தி உள்ளது.
    மதுரை:

    உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்க நாடு முழுவதும் வருகிற 3-ந் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மதுரையிலும் இதுவரை 50 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரசால் தொழிலதிபர், உள்ளிட்ட 2 பேர் பலியாகி உள்ள நிலையில் மதுரையிலும் கொரோனாவின் தாக்கத்தை மேலும் அதிகரிக்காமல் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    ஆனாலும் சாலைகளில் செல்வோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. சாலை விதியை மீறியதாக சுமார் 12,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    ஆனாலும் ஊரடங்கை மீறுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .நேற்று கோரிப்பாளையம் பகுதியில் கலெக்டர் வினய், போலீஸ் கமி‌ஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோர் நேரடியாக வாகன சோதனையில் ஈடுபட்டனர் .

    அப்போது பலர் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் தேவையற்ற முறையில் சுற்றி திரிவது தெரியவந்தது. இதையடுத்து ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்க மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் திட்டமிட்டுள்ளது.

    முக்கிய அலுவல் பணிக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு மட்டும் கியூ ஆர் குறியீடு கொண்ட அனுமதி அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த அட்டை வைத்துள்ள வாகனங்கள் மட்டுமே நாளை முதல் அனுமதிக்கப்படும் என்றும் மீறி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் சமூக பரவலாக மாறாத வகையில் பொதுமக்களை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் இத்தகைய தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. வருகிற 3ந்தேதி வரை இந்த ஊரடங்கு கடுமையாக கடைபிடிக்க சுகாதாரத்துறையும் அறிவுறுத்தி உள்ளது.

    மதுரை மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கு காலத்தில் அனாவசியமாக இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கலெக்டர் வினய் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

    நாளை(25-ந்தேதி) முதல் அனுமதி சீட்டு இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

    அதன்படி இன்று மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படும் வாகன அனுமதி சீட்டை பெற 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். அவர்களுக்கு அனுமதி சீட்டு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் அவர்கள் அனுமதி சீட்டு வழங்கும் மையத்தை முற்றுகையிட்டு திடீர் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.

    இதன் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஒரே சமயத்தில் 200-க்கும் மேற்பட்டோர் திரண்டதால் கொரோனா நோய் தொற்று அபாயம் ஏற்படும் நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.
    Next Story
    ×