என் மலர்

  செய்திகள்

  அம்மா உணவகம்
  X
  அம்மா உணவகம்

  3 வேளையும் இலவச உணவு- அம்மா உணவகங்களில் அலைமோதும் கூட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அம்மா உணவகங்களில் நேற்று முதல் 3 வேலையும் இலவசமாக உணவு வழங்கப்படுவதால், கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் சப்பாத்தி வழங்கப்பட்டு வந்த நிலையில், இப்போது அது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக தக்காளி சாதம் வழங்கப்படுகிறது.
  சென்னை:

  கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

  இதனால் ஏழை, எளிய மக்கள் அன்றாட உணவுக்கு சிரமப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதை போக்குவதற்காக சென்னையில் உள்ள 407 அம்மா உணவகங்களிலும் நேற்று முதல் 3 வேளையும் உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

  காலையில் இட்லி, பொங்கல், மதியம் சாம்பார், சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், இரவு சப்பாத்திக்கு பதிலாக தற்போது தக்காளி சாதம் வழங்கப்படுகிறது.

  மலிவான விலையில் வழங்கப்பட்டு வந்த இந்த உணவுகள் இப்பொழுது விலையின்றி மாநகராட்சி சார்பில் விநியோகிக்கப்படுகிறது. இதனால் அம்மா உணவகங்களில் கூட்டம் இப்போது அதிகரித்து உள்ளது. உணவு வகைகள் தயாரித்த உடன் தீர்ந்து விடுகின்றன. 407 அம்மா உணவகங்களிலும் 3 வேலையும் ஏழை, எளிய மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று உணவினை வாங்கி செல்கின்றனர்.

  அங்கு சென்று சாப்பிடுவதைவிட பாத்திரங்கள் எடுத்துச் சென்று அதிகளவில் வாங்கி செல்கின்றனர்.

  ஆள் நடமாட்டம் இன்றி களையிழந்த அம்மா உணவகங்கள் இப்போது பரபரப்பாகி உள்ளன.பெரும்பாலானவர்கள் வீடுகளுக்கு வாங்கி சென்று குடும்பத்துடன் சாப்பிடுவதை இப்போது காண முடிகிறது. கடந்த சில நாட்களாக அம்மா உணவகங்களில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் நிதியுதவி மூலம் உணவு வழங்கப்பட்டது. இப்போது அந்த பொறுப்பினை மாநகராட்சியே ஏற்று கொண்டு தன்னார்வலர்களிடம் இதற்கான செலவினத்தை பெற்று வருகிறது.

  3 வேலையும் இலவசமாக உணவு வழங்கப்படுவதால், கூட்டம் நிரம்பி வழிகிறது. குறிப்பாக இரவு நேரத்தில் சப்பாத்தி வழங்கப்பட்டு வந்த நிலையில், இப்போது அது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக தக்காளி சாதம் வழங்கப்படுகிறது.

  பெரும்பாலானவர்கள் சப்பாத்தி மீண்டும் வழங்கப்படுமா என்று எதிர்பார்க்கிறார்கள். இது குறித்து அம்மா உணவக ஊழியர்களிடம் கேட்ட போது, இரவில் வழங்கப்படும் சப்பாத்திக்கு தேவையான கோதுமை மாவு தற்போது வருவதில்லை. இதன் காரணமாக சப்பாத்தி நிறுத்தப்பட்டு, தக்காளி சாதம் வழங்கப்படுகிறது. இலவசம் என்று அறிவிக்கப்பட்டவுடன் கூட்டம் அதிகமாக வருவதால், அனைத்து உணவு பொருட்களும் உடனே தீர்ந்து விடுகின்றன என்றனர்.
  Next Story
  ×