என் மலர்

  செய்திகள்

  கொரோனா பரிசோதனை
  X
  கொரோனா பரிசோதனை

  திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவாரத்திற்கு பிறகு சுகாதார ஆய்வாளருக்கு கொரோனா தொற்று

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு பகுதியைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர் ஒருவருக்கு ஒருவாரத்திற்கு பிறகு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது

  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலை மாவட்டத்தில் 12 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 10 பேர் குணமடைந்தனர். 2 பேர் மட்டுமே அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த ஒரு வாரம் புதியதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படாமல் இருந்தது.

  இந்த நிலையில் செய்யாறு பகுதியைச் சேர்ந்த சுகாதார ஆய்வாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. பாதிப்புக்குள்ளான சுகாதார ஆய்வாளர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களின் வீடுகளுக்கு சென்று அங்கு தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களை தினசரி நேரில் பார்வையிட்டு பரிசோதனை செய்யும் மருத்துவ குழுவில் பணியாற்றி வந்தார்.

  கடந்த வாரம் மருத்துவ குழுவில் உள்ளவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது.

  கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி உள்ள சுகாதார ஆய்வாளர் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்யாறு பகுதியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், கலெக்டர் கந்தசாமி ஆகியோர் பங்கேற்ற கொரோனா வைரஸ் தடுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த சம்பவம்  தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மேலும் அந்த சுகாதார ஆய்வாளருடன் பணி செய்த மற்ற ஊழியர்களும் அச்சத்தில் உள்ளனர். பாதிக்கப்பட்ட சுகாதார ஆய்வாளரின் குடும்பத்தினர் மற்றும் அவருடன் பணியாற்றிய அலுவலர்களின் குடும்பத்தினர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர். அவர் சொந்த கிராமத்தில் உள்ள 7 தெருக்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.

  மேலும் கிராமத்தை சுற்றி 5 கி.மீ தூரத்துக்கு வெளியாட்கள் செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  திருவண்ணாமலை மாவட்டம் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்ட மாவட்டமாக மாறும் என்று மக்கள் நினைத்திருந்த நிலையில் மீண்டும் ஒருவருக்கு கொரோ தொற்று கண்டறியப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×