என் மலர்

  செய்திகள்

  ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
  X
  ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

  பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க ஏற்பாடு- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோவை மாவட்டத்தில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.
  கோவை:

  கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் ராஜாமணி, எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே.அர்ச்சுனன், வி.பி.கந்தசாமி, மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. பெரியய்யா, மாநகராட்சி தனி அதிகாரி ஷ்ரவன் குமார் ஜடாவத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி, மாவட்ட வருவாய் அதிகாரி ராம துரைமுருகன், கோவை அரசு ஆஸ்பத்திரி டீன் (பொறுப்பு) காளிதாஸ், கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி டீன் நிர்மலா, சுகாதாரத்துறை பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

  கூட்டம் முடிந்ததும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

  கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் இதுவரை 3 ஆயிரத்து 389 பேருக்கு கொரோனா தொற்று இருக்கிறதா என பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 3,255 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. 134 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. டாக்டர்களின் தீவிர சிகிச்சைக்கு பிறகு 83 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோவை மாநகரில் 10 பகுதியும், புறநகரில் 8 பகுதியும் பொதுமக்கள் வெளியே செல்ல தடை செய்யப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இங்கு வசிப்பவர்கள் வெளியே செல்லவும், மற்றவர்கள் உள்ளே வரவும் அனுமதி கிடையாது. அந்த பகுதி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாகனங்களில் சென்று வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்று பரவுவது தடுக்கப்பட்டுள்ளது.

  தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரி, இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் 7 பரிசோதனை கருவிகள், கொரோனா அறிகுறியை சோதிப்பதற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் தினமும் 1000 பேரின் மாதிரிகளை பரிசோதனை செய்ய முடியும். கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் மாதிரிகளுக்கும் இங்கு பரிசோதனை செய்யப்படுகிறது.

  கோவை மாவட்டத்தில் 9 லட்சத்து 77 ஆயிரம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை ரூ.1000 மற்றும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் மே மாதத்துக்கான அத்தியாவசிய பொருட்கள் அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு ஆகியவை ரேஷன் கடைகளில் விலையின்றி வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் அறிவித்தார். நாளை (வெள்ளிக்கிழமை) மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அவரவர் வீட்டிலேயே டோக்கன் வழங்கப்படும். சம்பந்தப்பட்ட ரேஷன் கார்டுதாரர்கள் குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் ரேஷன்கடைகளுக்கு சென்று அத்தியாவசிய பொருட்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

  தொழிலாளர் நலத்துறை மூலம் 39 ஆயிரத்து 353 தொழிலாளர்கள், 4 ஆயிரத்து 277 ஆட்டோ டிரைவர்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 630 பேருக்கு தலா ஆயிரம் ரூபாயுடன் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 8,109 சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க ஒதுக்கீடு பெறப்பட்டு இதுவரை 7 ஆயிரத்து 20 பேருக்கு விடுவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் காய்கறிகளை விற்பனை செய்ய ஏதுவாக உழவர் சந்தைகளும், காய்கறி மார்க்கெட்டுகளுக்கும் விளை பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்களுக்கும் செயல்பட சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  கோவை மாவட்டத்தில் சுமார் 190-க்கும் மேற்பட்ட நடமாடும் காய்கறி வாகனங்களும், 7 உழவர் சந்தைகளும்,காய்கறி மார்க்கெட்டுகளும் செயல்பட்டு வருகிறது. மலைவாழ் கிராம மக்களுக்கு இலவசமாக காய்கறிகள் வழங்கப்பட்டு வருகிறது. 15 அம்மா உணவகங்கள் மூலம் தினமும் 21 ஆயிரத்து 600 பேருக்கு முட்டையுடன் கூடிய உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. 43 ஆயிரத்து 500 வெளிமாநில, வெளி மாவட்ட தொழிலாளர்களுக்கு தினமும் மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறை மூலம் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியாக 170 பேர் மூலம் ரூ.11 கோடியே 4 லட்சம் பெறப்பட்டுள்ளது. இன்னும் பல்வேறு தொழில் வர்த்தக நிறுவனங்கள், முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கிட முன்வர வேண்டும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  இதையடுத்து கோவை மாவட்ட ரோட்டரி சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் அண்ணாதுரை ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ 15 லட்சத்தில் 2 வென்டிலேட்டர்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம் வழங்கினர். அவற்றை கொரோனா பரிசோதனை மேற்கொள்வதற்காக அமைச்சர் வழங்கினார். 
  Next Story
  ×