search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வண்ணாரப்பேட்டை-திருவொற்றியூர் மெட்ரோ ரெயில் பணி அடுத்த வாரம் தொடக்கம்

    வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் இடையேயான மெட்ரோ ரெயில் விரிவாக்க பணியை வருகிற 20-ந் தேதிக்கு பிறகு மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.
    ராயபுரம்:

    வண்ணாரப்பேட்டை- திருவொற்றியூர் இடையே 9 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி வேகமாக நடந்து வந்தது. இதற்காக ராட்சத தூண்கள் அமைக்கப்பட்டு வந்தன.

    வண்ணாரப்பேட்டை முதல் தண்டையார்பேட்டை வரை சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் செல்கிறது. மேலும் தியாகராய கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை உள்பட 8 இடங்களில் ரெயில் நிலையங்கள் அமைக்கும் பணி நடந்து வந்தது.

    இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மெட்ரோ ரெயில்கள் இயக்கமும், கட்டுமான பணிகளும் நிறுத்தப்பட்டது. இங்கு வேலை பார்த்து வந்த ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர்.

    இதற்கிடையே வருகிற 20-ந் தேதிக்கு பிறகு கட்டுமான பணிகளை தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் மெட்ரோ ரெயில் பணிகள் தொடங்கப்பட உள்ளன.

    அடுத்த வாரம் முதல் தற்போது இருக்கும் தொழிலாளர்களை கொண்டு மெட்ரோ ரெயில் பணி தொடங்கப்படும் என்று தெரிகிறது.

    இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் கூறும் போது, ‘வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் இடையேயான மெட்ரோ ரெயில் விரிவாக்க பணியை வருகிற 20-ந் தேதிக்கு பிறகு மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் நடந்து வருகிறது.

    இதுபற்றி சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்களிடம் பணிகளை தொடங்க தயாராக இருக்க வலியுறுத்தி உள்ளோம்’ என்றார்.
    Next Story
    ×