search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விஜயகாந்த்
    X
    விஜயகாந்த்

    கொரோனா வைரசால் ஊரடங்கு உத்தரவு - விஜயகாந்த் ரூ.5 கோடி நிவாரண உதவி

    ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதையடுத்து தேமுதிக தலைவர் பொதுமக்களுக்கு ரூ.5 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கொரோனா வைரசை தடுக்க 3-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்கள் உள்பட அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    தே.மு.தி.க. சார்பில் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியும், தே.மு.தி.க. தலைமை அலுவலகமும் கொரோனா சிகிச்சைக்காக ஏற்கனவே தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கான தேவை அதிகமாக உள்ளது. எனவே பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தே.மு.தி.க. சார்பில் ரூ.5 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் மே 3-ந் தேதிக்கு பிறகு வழங்கப்படும்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊரடங்கு நீங்கிய பிறகு கட்சி நிர்வாகிகள் வாயிலாக பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும்.

    உதவி பொருட்களை வழங்க தே.மு.தி.க.வினர் தயாராக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×