search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கே.எஸ்.அழகிரி
    X
    கே.எஸ்.அழகிரி

    மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையை போக்க வேண்டும்- கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

    மருத்துவ உபகரணங்கள் பற்றாக்குறையை தமிழக அரசு போக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்தியாவைப் பொறுத்த வரை, 3 கோடியே 80 லட்சம் முகக்கவசங்களும், 60 லட்சம் பாதுகாப்பு உடைகளும் தேவைப்படுகின்றன. பாதுகாப்பு உபகரணங்களின் பற்றாக்குறை சுகாதாரப் பணியாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவ தோடு, சிகிச்சையையும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

    செயற்கை சுவாசக் கருவியான வெண்டிலேட் டரைப் பொறுத்தவரை, தற்போதைய சூழலில் 10 லட்சம் தேவைப்படுகின்றன. ஆனால், இந்தியா முழுவதும் வெறும் 49 ஆயிரம் வெண்டிலேட்டர்கள் மட்டுமே உள்ளன. கொரோனா பாதிப்புக்கு உள்ளானோரை பரிசோதிக்கும் கருவிகள் நம்மிடம் போதிய அளவு இல்லை என்பதை மத்திய அரசின் கோவிட் 19 மருத்துவனைகளின் மருத்துவக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கிரிதர் கியானி ஒத்துக்கொள்கிறார். 123 அரசு மருத்துவமனைகளில் வெறும் 36 சதவீத பரிசோதனை ஆய்வகங்களே உள்ளன. 

    இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு 10 ஆய்வகங்களே உள்ளன. 10 லட்சம் பேரில் 21 பேருக்கு சோதனை செய்கிற வசதிதான் இந்தியாவில் உள்ளன. ஆனால் தென்கொரியாவில் 1931, இத்தாலி 6268, பிரிட்டன் 1469, அமெரிக்கா 1480, இந்தியா 21 என்கிற அதலபாதாள நிலையில் இருக்கிறது. அதே போல 10 ஆயிரம் மக்களுக்கு 8 மருத்துவர்கள் தான் இந்தியாவில் உள்ளனர். ஆனால் இத்தாலியில் 41, கொரியாவில் 71 என்கிற அளவில் இருக்கிறது. மேலும் 55 ஆயிரம் மக்களுக்கு ஒரு அரசு மருத்துவமனை தான் இருக்கிறது. இத்தகைய குறைவான கட்டமைப்பு இருப்பதால் தான் தமிழகத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். 

    கடந்த 20 நாட்களாக அவர்களுக்கு நோய் இருக்கிறதா, இல்லையா என்பதை பரிசோதிக்க முடியாத அவல நிலையில் தமிழக அரசு இருக்கிறது. சீனாவில் இருந்து துரித சோதனை கருவி வரும், வரும் என்று சொன்னார்கள். ஆனால் இதுவரை வந்தபாடு இல்லை. இந்நிலையில் அச்சம், பீதியோடு மன உளைச்சலில் லட்சக்கணக்கான மக்கள் தவித்து வருகிறார்கள். உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர் டாக்டர் மைக்கேல் ஜே ரியான் உலக நாடுகளுக்கு அவர் விடுத்த வேண்டுகோளில், “கொரோனாவுக்கு எதிரான போரில் நீங்கள் முந்த வேண்டும். இல்லையேல், நீங்கள் நகரமுடியாதபடி கட்டிப் போட்டுவிட்டு வைரஸ் முந்திவிடும்” என்று எச்சரித்திருந்தார். இதனை இந்தியா கருத்தில் கொண்டு விரைந்து செயல்பட வேண்டும். பிரதமர் கொரோனா நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்துவதற்கு மருத்துவ கட்டமைப்பு வசதிகளை பெருக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×