search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கரூர் மருத்துவக் கல்லூரியில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் 106 பேர் அனுமதி

    இன்றைய நிலவரப்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 106 பேருக்கு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    கரூர்:

    கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அண்டை மாவட்டங்களை சேர்ந்த கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கும் இங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    கரூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் 23 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் ஒருவருக்கு திருச்சி அரசு ஆஸ்பத்திரியிலும், மற்ற 22 பேருக்கு கரூர் மருத்துவக் கல்லூரியிலும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 45 பேர் கரூருக்கு மாற்றப்பட்டனர்.

    அதேபோன்று நாமக்கல் மாவட்டத்தில் இருந்தும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் இங்கு மாற்றப்பட்டனர். இன்றைய நிலவரப்படி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 106 பேருக்கு கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    அதுமட்டுமல்லாமல் டெல்லி மாநாடு சென்று திரும்பிய 18 பேர் மற்றும் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் என மொத்தம் 22 பேர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முதற்கட்ட பரிசோதனையில் யாருக்கும் நோய் தொற்று உறுதி செய்யப்படவில்லை.

    இருப்பினும் 14 நாட்கள் கழித்து மீண்டும் ரத்தப் பரிசோதனை செய்து நோய் தொற்று இல்லை என உறுதி செய்த பின்னரே டிச்சார்ஜ் செய்யப்படுவார்கள் என டீன் ரோஸி வெண்ணிலா தெரிவித்தார்.

    இதில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவரின் கர்ப்பிணி மனைவியும், அவரது தாயும் உள்ளனர். அவர்களுக்கு நோய் தொற்று இல்லை.
    Next Story
    ×