search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதித்த 44 பேருக்கு சிகிச்சை

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் இன்றுகாலை நிலவரப்படி கொரோனா பாதித்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 38பேர், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 2பேர், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 44 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    நெல்லை:

    நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா நோய் சிகிச்சை மையம் மற்றும் பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள சிறப்பு வார்டில் கொரோனா பாதித்தவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த கொரோனா வைரஸ் நோயாளிகள் 41பேர் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் நெல்லை மாவட்டத்தில் முதன்முதலாக கொரோனா பாதித்து சிகிச்சை பெற்றுவந்த ராதாபுரம் பகுதியை சேர்ந்த வெளிநாட்டிலிருந்து வந்த தொழிலாளி பூரண குணமடைந்ததை தொடர்ந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    இந்தநிலையில் நேற்று கூடுதலாக 4பேர் கொரோனா தொற்றுடன் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் இன்றுகாலை நிலவரப்படி நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா பாதித்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 38பேர், தென்காசி மாவட்டத்தை சேர்ந்த 2பேர், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 4 பேர் என மொத்தம் 44 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், தொடர்பில் இருந்தவர்கள் என்று கண்டறியப்பட்ட 171 பேரின் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதில் முதல்கட்டமாக 83 பேருக்கு ரத்த பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

    நெல்லை மாவட்டத்தில் சுமார் 4,500பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். தற்போது தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிந்ததால் பலர் வழக்கமான பணிகளை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் 850பேர் உள்ளனர். அவர்களை சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
    Next Story
    ×