search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஆதரவற்றோருக்கு 12-வது நாளாக உணவு வழங்கிய ரெயில்வே போலீசார்

    எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம் பகுதிகளிலில் ஆதரவின்றி சாலையோரங்களில் தஞ்சம் அடைந்திருப்பவர்களின் பசியை போக்கும் பணியில் சென்னை எழும்பூர் ரெயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
    சென்னை:

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தினக்கூலிகள், சிறு, குறு தொழில் செய்வோர், ஆட்டோ டிரைவர்கள் உள்பட பலர் அத்தியாவசிய வீட்டு தேவைகளை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

    இந்தநிலையில் எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம் பகுதிகளிலில் ஆதரவின்றி சாலையோரங்களில் தஞ்சம் அடைந்திருப்பவர்களின் பசியை போக்கும் பணியில் சென்னை எழும்பூர் ரெயில்வே போலீசார் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து 12-வது நாளாக நேற்றும் ஆதரவற்றோருக்கு உணவு, தண்ணீர் பாட்டில்களை வழங்கினர்.

    இந்த உணவுகளை எழும்பூர் ரெயில்வே போலீஸ் துணை சூப்பிரண்டு எட்வர்டு தனது சொந்த செலவில் வழங்கி வருகிறார். மேலும் அவர் ஆதரவற்றோருக்கு ஆடைகளும் வழங்குகிறார். நாள் ஒன்றுக்கு 50 முதல் 70 பேருக்கு உணவுகளை வழங்கிவரும் அவர், நேற்று முன்தினம் மட்டும் 125 பேரின் பசியை போக்கி உள்ளார். இவரது செயலை தினமும் காணும் அப்பகுதி மக்கள், இவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.
    Next Story
    ×