search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 52 பேருக்கு கொரோனா பரிசோதனை

    டெல்லியில் நடந்த மத மாநாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 52 பேர் பங்கேற்றது கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து அவர்களுக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    ராணிப்பேட்டை:

    டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 52 பேர் பங்கேற்றுள்ளதை மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிய வந்துள்ளது.

    டெல்லியில் நடந்த மாநாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த 52 பேர் பங்கேற்றுள்ளனர்.

    இதில் 10 பேர் டெல்லியில் உள்ளனர். மீதமுள்ள 41 பேர் வாலாஜா அரசு தலைமை மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளனர். இதில் ஒருவர் மட்டும் செங்கல்பட்டு மருத்துவமனையில் உள்ளார்.

    மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாக்களில் கலவை தவிர வாலாஜா, சோளிங்கள், ஆற்காடு, நெமிலி, அரக்கோணம் ஆகிய 5 தாலுகாக்கள் சார்ந்த நபர்கள் மட்டும் டெல்லி மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

    மருத்துவமனையில் உள்ள 41 பேரில் முதற்கட்டமாக 10 பேருக்கு மட்டும் ரத்த மாதிரிகளை பரிசோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்களின் ரத்த மாதிரி முடிவுகள் இன்று மாலை தெரிய வரும். மீதமுள்ளவர்களுக்கு படிப்படியாக ரத்த மாதிரிகளை பரிசோனைக்கு அனுப்பிவைக்கப்படும்.

    தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் 41 பேர் வாலாஜா அரசு மருத்துவமனை கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×