search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தனிமைப்படுத்துதல்
    X
    தனிமைப்படுத்துதல்

    திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 42 பேர் மூடப்பட்ட மருத்துவ கல்லூரியில் தனிமை

    டெல்லி மாநாடு சென்று திரும்பிய திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 42 பேர் மூடப்பட்ட மருத்துவ கல்லூரியில் தனிமைபடுத்தப்பட்டு சுகாதார அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    டெல்லியில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டு தமிழகம் திரும்பியவர்களில் 190 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

    டெல்லி சென்று வந்தவர்கள், தாங்களாகவே மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பரிசோதனை செய்யவேண்டும் என்று அரசு அறிவித்து உள்ளது.

    இந்த நிலையில் டெல்லி மாநாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊத்துக்கோட்டை, பொன்னேரி, மீஞ்சூர், பெரியபாளையம், கடம்பத்தூர், திருவலாங்காடு, ஈக்காடு, சோழவரம், ஆர்கே பேட்டை, புழல், பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 42 பேர் சென்று வந்திருப்பது விசாரணையில் தெரிந்தது.

    இதையடுத்து அந்த42 பேரையும் திருவள்ளூரை அடுத்த நாராயணபுரம் அருகில் உள்ள மூடப்பட்ட தனியார் மருத்துவ கல்லூரி வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    மேலும் அவர்களது ரத்த மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 28 நாட்கள் வரை அவர்களை தனிமைப்படுத்த சுகாதார அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். அவர்களது உடல் நிலையை 24 மணிநேரமும் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
    Next Story
    ×