search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவை வந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினரை படத்தில் காணலாம்.
    X
    கோவை வந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினரை படத்தில் காணலாம்.

    முக்கிய சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு - பேரிடர் மீட்பு படையினர் 85 பேர் கோவை வந்தனர்

    பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 85 பேர் கோவை வந்தனர். அவர்கள் முக்கிய சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    கோவை:

    கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடையை மீறி வெளியே செல்வதை தடுக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மாவட்ட எல்லையில் உள்ள 14 சோதனைச்சாவடிகளும் சீல் வைக்கப்பட்டு அங்கு போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அதுபோன்று தடையை மீறி வெளியே செல்பவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கோவையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக சென்னையில் இருந்து பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 85 பேர் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் நேற்று முன்தினம் இரவில் கோவை வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் பல்வேறு குழுக்களாக பிரிக்கப்பட்டு முக்கிய சோதனைச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்கள் போலீசாருடன் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறியதாவது:- கோவையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசாருடன் இணைந்து பணியாற்ற பேரிடர் மீட்பு படையை சேர்ந்தவர்கள் கோவைக்கு வந்து உள்ளனர். அவர்கள் தலையில் இருந்து கால் வரை உடல் முழுவதும் உடை அணிந்தபடி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    மேலும் மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளுக்கும் சிலர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். தற்போது 85 பேர் மட்டுமே வந்து உள்ளனர். தேவைப்பட்டால் கூடுதல் வீரர்களை அனுப்ப அரசுக்கு கோரிக்கை விடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
    Next Story
    ×