search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவை விரட்ட களத்தில் இறங்கிய கிராமமக்கள்

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் கிராமமக்களே கொரோனாவில் இருந்து தங்களை காத்துக்கொள்ள கிராம எல்லைகளில் தடுப்புக்கட்டைகள் அமைத்து ஊருக்குள் வருவோர் மற்றும் போவோரை சோதனை செய்து வருகின்றனர்.
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிராமங்களில் கிராமமக்களே கொரோனாவில் இருந்து தங்களை காத்துக்கொள்ள கிராம எல்லைகளில் தடுப்புக்கட்டைகள் அமைத்து ஊருக்குள் வருவோர் மற்றும் போவோரை சோதனை செய்து வருகின்றனர்.

    அதன்படி தஞ்சை காசவளநாடு புதூர் கிராமத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி ஊரில் உள்ள 5 நுழைவாயில்களில் சோதனைசாவடி அமைத்து அதில் எப்போதும் 2 பேர் பணியமர்த்தப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அத்துடன் சோதனை சாவடியில் மஞ்சள், வேப்பிலை கலந்த தண்ணீர் ஒரு கேனில் வைத்து அந்த ஊரை சேர்ந்தவர்கள் வெளியே சென்று வரும்போது அந்த தண்ணீரில் சுத்தமாக கைகழுவிய பிறகு மாஸ்க் வழங்கப்பட்டு அதன்பிறகே ஊருக்குள் அனுமதிக்கின்றனர். மேலும் ஊர்மக்களே சேர்ந்து 2 பேரை வேலைக்கு அமர்த்தியுள்ளனர்.

    குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் கிராம வாசிகள் ஒலிபெருக்கி மூலம் கொரோனா பாதிப்பு குறித்து கிராமமக்களிடம் விழிப்புணர் ஏற்படுத்தி வருகின்றனர்.

    அதேபோல் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகில் உள்ள உள்ளூர் கிராமத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த கிராமத்தின் நுழைவு வாயிலில் செக்போஸ்ட் அமைத்து அந்த வழியாக போவோர் வருவோரை தணிக்கை செய்து வருகின்றனர். இத்தோடு வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து அந்த வாகனங்களின் எண்களை பதிவு செய்து மீண்டும் அதே வாகனம் அந்த வழியாக செல்லக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்நியர்கள் தேவையில்லாமல் ஊருக்குள் நுழைய வாய்ப்பு இருக்காது என்பதே அந்த கிராம மக்களின் நம்பிக்கை. இதன் மூலம் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தங்களை காத்துக்கொள்ள முடியும் என இந்த கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
    Next Story
    ×