search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை விமான நிலையம்
    X
    சென்னை விமான நிலையம்

    சென்னையில் 506 விமானங்கள் முற்றிலும் நிறுத்தம்

    சென்னை விமான நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு இயக்கப்பட்ட 506 பயணிகள் விமானசேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
    சென்னை:

    கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் விமான சேவைகளுக்கு கடந்த 22-ந்தேதியிலிருந்து தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    அதைப்போல் உள்நாட்டு விமானசேவைகளுக்கு இன்று அதிகாலையிலிருந்து தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் சர்வதேச விமான சேவை முற்றிலுமாக முடங்கியது. (வருகை 57, புறப்பாடு 57 என மொத்தம் 114 விமானசேவைகள் ரத்து). கடந்த 22-ந் தேதியிலிருந்து ரத்தானது.

    இன்று முதல் சென்னையில் இருந்து புறப்படும் 196 விமானங்கள் வருகை தரும் 196 விமானங்கள் என மொத்தம் 392 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் சென்னை விமான நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு இயக்கப்பட்ட 506 பயணிகள் விமானசேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

    அதே நேரத்தில் சென்னை பழைய விமானநிலையத்தில் சரக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. நள்ளிரவு 12.30 மணிக்கு ஹாங்காங்கிலிருந்து கேத்தேபசிபிக் ஏர்லைனஸ் சரக்கு விமானம் சென்னை வந்து விட்டு, மீண்டும் அதிகாலை 3 மணிக்கு பெங்களூர் புறப்பட்டு சென்றது.

    அதைப்போல் சிங்கப்பூரிலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சரக்கு விமானம் அதிகாலை 5 மணிக்கும், மஸ்கட்டிலிருந்து ஓமன் ஏர்லைன்ஸ் சரக்கு விமானம் காலை 6.30 மணிக்கும் சென்னை பழைய விமானநிலையம் வந்தன.

    இன்று பகலில் மேலும் சில சரக்கு விமானங்கள் வரவிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஊரடங்கு அமலில் இருந்தாலும், விமானநிலைய சரக்கு கையாளும் பகுதியில், பணியாற்றும் லோடார்கள் அத்தியாவசியப்பணி என்ற அடிப்படையில் வேலைக்கு வந்துள்ளதால், சரக்கு விமானங்களில் சரக்குகளை ஏற்றி இறக்கும் பணி தடையின்றி நடைபெறுகிறது.
    Next Story
    ×