search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மு.க. ஸ்டாலின்
    X
    மு.க. ஸ்டாலின்

    அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு திமுக எம்பி எம்எல்ஏக்கள் நிதியுதவி: மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

    தி.மு.க. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் தங்களது ஒருமாத சம்பள தொகையை நிதியுதவியாக வழங்குவார்கள் என அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
    சென்னை:

    சீனாவில் தோன்றி உலக நாடுகளில் பெரும் பாதிப்பு ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் இத்தாலி, ஈரான் உள்ளிட்ட 160க்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிர தாக்கம் ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து இதனால் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

    இந்தியாவில் இதுவரை 370க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து உள்ளனர்.  இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கூறும்பொழுது, தி.மு.க. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு தங்களது ஒருமாத சம்பள தொகையை நிதியுதவியாக வழங்குவார்கள் என அறிவித்துள்ளார்.

    இந்த கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் வருவாய் இழந்து பாதிக்கப்படும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், சென்னை ஐகோர்ட்டு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், தனது ஒருமாத சம்பள தொகையான 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை, முதல் அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு நேற்று வழங்கியுள்ளார். இதற்காக தலைமை செயலாளர் சண்முகத்தை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து, அதற்கான காசோலையை வழங்கினார்.
    Next Story
    ×